உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல்

பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல்


சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ள 'பராசக்தி' படம் தமிழில் தனது முதல் படம் என்பதால் இந்த படத்தின் ரிசல்ட்டை பெரிய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் ஸ்ரீ லீலா. இந்த நிலையில், தற்போது பராசக்தி படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தனது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பு குறித்து அவர் ஒரு செய்தி வெளியிட்டுளளார்.

அதில், ''பராசக்தி படம் திரைக்கு வந்து மூன்று நாட்களுக்கு பிறகு பலர் என்னை தொடர்பு கொண்டு எனது நடிப்பை வெகுவாக பாராட்டினார்கள். கடந்த காலங்களில் நான் நடித்த படங்களை பார்த்து விட்டு பாடல்கள் மற்றும் எனது நடனத்தை மட்டுமே பாராட்டினார்கள். தற்போது முதல் முறையாக எனது நடிப்புக்கு இந்த பராசக்தி படத்தில் பாராட்டு கிடைத்திருக்கிறது. இந்த படம் எனது நடிப்புக்கு முழுமையான அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறது'' என்று கூறும் ஸ்ரீலீலா, ''இந்த படத்தை பார்த்துவிட்டு கண்ணீருடன் தியேட்டரை விட்டு வெளியே வந்ததாக ரசிகர்கள் கூறுவது நெகிழ்ச்சியான அனுபவமாக உள்ளது. அந்த வகையில் பராசக்தி படம் வெற்றியா தோல்வியா என்பது எனக்கு தெரியாது. ஆனால் என் நடிப்புக்கு இந்த படம் நல்ல அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது'' என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !