உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது

அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது


'மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ' படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், கடைசியாக ரஜினிகாந்தை வைத்து 'கூலி' படத்தை இயக்கினார். சில எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும், படம் 500 கோடிக்கும் மேல் வசூலை பெற்றது. இருந்தாலும், லோகேஷ் கனகராஜின் 'டச்' அந்த படத்தில் இல்லை எனவும் விமர்சிக்கப்பட்டது.

தனது அடுத்த படமாக கார்த்தியை வைத்து 'கைதி 2' இயக்குவார் என சொல்லப்பட்ட நிலையில், இடையே தெலுங்கில் ஒரு படம் இயக்க உள்ளதாக செய்தி வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று (ஜன.,14) அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்குவதாகவும், 'புஷ்பா 2, குட் பேட் அக்லி' உள்ளிட்ட படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜூனின் 23வது படமாகவும், லோகேஷ் கனகராஜின் 7வது படமாகவும் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது. தற்போது அல்லு அர்ஜூன் தனது 22வது படமாக அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து தமிழ் இளம் இயக்குனர்களின் படங்களில் நடிப்பதால் கவனம் ஈர்க்கிறார் அல்லு அர்ஜூன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !