விருமாண்டி ஸ்டைலில் விக்ரம் பர்ஸ்ட் லுக்
மாஸ்டர் படத்தை அடுத்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இப்படம் பற்றிய அறிவிப்பையே டீசர் உடன் வெளியிட்டனர். அந்த டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியானது. வில்லன்களாக பஹத் பாசில் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் இப்போது வெளியிடப்பட்டுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் அதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகிய மூன்று பேரையும் ஒரு போஸ்டரில் கொண்டு வந்துள்ளனர். இந்த போஸ்டரை பார்க்கும்போது கமல் நடிப்பில் வெளியான விருமாண்டி பட போஸ்டரை பார்ப்பது போன்று உள்ளது. ஆனால் விருமாண்டி போஸ்டரை சிறப்பாக வடிவமைத்து இருந்தனர். ஆனால் விக்ரம் போஸ்டரில் மூவரின் போட்டோக்களையும் அப்படியே ஒட்ட வைத்திருப்பது போன்று உள்ளது. இருந்தாலும் ரசிகர்கள் இதை வரவேற்றுள்ளனர்.