மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1519 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1519 days ago
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து தமிழில் வெளிவந்து பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்ற படம் அசுரன். இப்படத்தை தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ், மஞ்சு வாரியார் கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்தார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிவடைந்தது. படத்தை மே மாதம் வெளியிடுவதாக திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
இதையடுத்து படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியானது. ஆனால் அதற்கு வெங்கடேஷ் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களது எதிர்ப்பை அடுத்து படத்தை தியேட்டர்களில் வெளியிட உள்ளதாக கடந்த வாரங்களில் தகவல் வந்தது. இந்நிலையில் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கான விளம்பர வேலைகளை அமேசான் ஓடிடி தளம் ஆரம்பித்துவிட்டது. இதன்மூலம் படம் தியேட்டர்களில் வெளியாகவில்லை ஓடிடி தளத்தில் தான் வெளியாகிறது என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் படத்தின் வெளியீட்டு நாள் எது என்பதை அந்நிறுவனம் அறிவிக்கவில்லை.
அதேசமயம் வெங்கடேஷ் நடித்துள்ள மற்றொரு படமான த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கில் ஒடிடி தளத்தில் தான் வெளியாகும் என தெரிகிறது.
1519 days ago
1519 days ago