மணமகனின் உயரம் கண்டு அசந்துபோன மம்முட்டி
ADDED : 1670 days ago
மலையாள நடிகர் மம்முட்டியை பொறுத்தவரை தனக்கு நேரம் கிடைக்கும் பட்சத்தில் தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்களின் திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்வுகளில் பெரும்பாலும் தவறாமல் கலந்து கொள்வார். அப்படித்தான் சமீபத்தில் கொச்சியில் நடைபெற்ற தில்ஷாத் மற்றும் சாரா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மம்முட்டி.
மணப்பெண் வீட்டினர் சார்பாக கலந்து கொண்ட மம்முட்டி, அப்போதுதான் முதன்முறையாக மணமகனை நேரில் பார்த்தவர், அவரது உயரத்தை கண்டு அசந்து போனார். மணமகனை அவர் ஆச்சர்யத்துடன் அண்ணாந்து பார்க்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி உள்ளது.