மேலும் செய்திகள்
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
1512 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
1512 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
1512 days ago
தமிழில் ஹிட்டாகும் படங்களில், தனக்கு செட்டாகும் என்றால் உடனே அந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை கைப்பற்றி அதில் நடித்து வெற்றியையும் ருசித்து விடுவார் நடிகர் வெங்கடேஷ். குறிப்பாக தெலுங்கு நேட்டிவிட்டிக்கு ஏற்ற மாதிரி காட்சிகளை மாற்றினாலும் தமிழில் எடுக்கப்பட்ட காட்சிகளில் பெரிய அளவில் மாற்றம் செய்ய மாட்டார். அப்படித்தான் தற்போது தனுஷின் அசுரன் படத்தை நரப்பா என்கிற பெயரில் ரீமேக் செய்து நடித்துள்ளார் வெங்கடேஷ். இந்தப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் அட்டலா இயக்கியுள்ளார்.
அசுரன் படத்தில் இடம்பெற்ற பிளாஸ்பேக் காட்சியில் உயர்ந்த ஜாதியினர் தாழ்த்தப்பட்டவர்கள் மீது காட்டும் அடக்குமுறையை தென் மாவட்ட பின்னணியில் சொல்லியிருந்தார்கள். தெலுங்கிலும் அந்த கருவை மாற்றாமல் ராயலசீமா பகுதியில் அதேபோல பிளாஸ்பேக் காட்சி நடைபெறுவதாக காட்டியுள்ளார்களாம். பொதுவாக ஆந்திராவை பாசிடிவான அணுகுமுறையுடன் இதுவரை தனது படங்களில் காட்டிவந்த இயக்குனர் ஸ்ரீகாந்த், தற்போது ஒரு குறிப்பிட்ட பகுதியினரை மட்டும்' மோசமாக சித்தரிப்பது நியாயமா என நெட்டிசன்கள் தங்களது விமர்சனங்களை சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
1512 days ago
1512 days ago
1512 days ago