மேலும் செய்திகள்
டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்'
1534 days ago
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1534 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1534 days ago
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. இப்படத்திற்காக தற்போது பிரமோஷன் பாடல் ஒன்றை படக்குழு படமாக்கி வருகிறது. அதில் கலந்து கொள்வதற்காக ஆலியா பட் இன்று மாலை ஹைதராபாத்திற்குப் பயணமாகி உள்ளார்.
இந்த பிரமோஷன் பாடல் காட்சியின் படப்பிடிப்பு முடிந்த பிறகு படக்குழுவினர் ஐரோப்பிய நாடுகளில் பாடல்களைப் படமாக்க உள்ளது. அத்துடன் படப்பிடிப்பு முடிவடையும் என்கிறார்கள்.
அவ்வப்போது சரியான இடைவெளியில் 'ஆர்ஆர்ஆர்' படம் பற்றிய அப்டேட்டுகளை படக்குழுவினர் வழங்கி வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு 'ரோர் ஆப் ஆர்ஆர்' என படப்பிடிப்புக் காட்சி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்கள். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தியத் திரையுலகில் அடுத்த பிரம்மாண்ட வெளியீடாகப் பார்க்கப்படும் 'ஆர்ஆர்ஆர்' படம் அக்டோபர் 13ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
1534 days ago
1534 days ago
1534 days ago