மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1534 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1534 days ago
மார்வல் சினிமா உருவாக்கிய சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் முக்கியமானது ப்ளாக் விடோ . அயர்ன் மேன் 2 படத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு பின் அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா படங்களிலும் பிளாக் விடோ கேரக்டர் இடம் பெற்றது. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தில் பிளாக் விடோ இறந்து விடுவார்.
ஆனாலும் பிளாக் விடோ கேரக்டரை மையப்படுத்தி படம் உருவாக்கும் முயற்சியில் மார்வெல் நிறுவனம் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு தொடங்கி 2019ம் ஆண்டு படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்தது. கடந்த ஆண்டே இந்தப் படம் வெளியாகவிருந்தது. ஆனால் கொரோனா நெருக்கடி காரணமாக பல முறை படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில பிளாக் விடோ தியேட்டர்களில் வெளியானது. அதோடு டிஷ்னி ஓடிடி தளத்திலும் வெளியானது. திரையரங்கிலும், ஓடிடி தளத்திலும் ஒரே நாளில் வெளியான முதல் மார்வல் சூப்பர் ஹீரோ திரைப்படம் இதுதான். படம் பற்றி இருவிதமான விமர்சனங்கள் இருந்தாலும் வசூலில் சாதனை படைத்தது.
இந்த நிலையில் பிளாக்விடோ இந்தியாவில் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தியேட்டர்கள் திறக்கப்படும் சாத்தியம் இல்லை என்பதல் இந்தியாவிலும் டிஷ்னி ஹாட்ஸ்பாட் ஓடிடி தளத்திலேயே வெளியாகிறது. ஆங்கிலம் தவிர இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 6 மொழிகளில் ப்ளாக் விடோ வெளியாகிறது. வெளிவரும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
1534 days ago
1534 days ago