உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சீனிமா தராததை சீரியல் தந்தது: ராதிகா ப்ரீத்தி

சீனிமா தராததை சீரியல் தந்தது: ராதிகா ப்ரீத்தி

கர்நாடகத்தை சேர்ந்தவர் ராதிகா ப்ரீத்தி. மாடல் உலகில் இருந்து சினிமாவுக்கு வந்தார். கன்னடத்தில் ராஜா லவ் ராதே என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் எம்பிரான் என்ற படத்தில் அறிமுகமானார். இரண்டு படங்களுமே தோல்வி படங்களாக அமைந்து விட அடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சின்னத்திரைக்கு வந்தார். தற்போது அவர் பூவே உனக்காக தொடரில் பூவரசி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் இருந்து பலர் விலகியும் ராதிகா ப்ரீத்தி தொடர்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது: அடிப்படையில் நான் ஒரு த்ரோபால் வீராங்கணை, விளையாட்டில் இருந்து மாடலிங் துறைக்கு வந்தேன். அதன் மூலம் சினிமாவிற்கு வந்தேன். இப்போது சின்னத்திரையில் இருக்கிறேன். நான் நடித்த சினிமாக்கள் தராத புகழை எனக்கு சீரியல் தந்தது. தொடர்ந்த நிறைய வாய்ப்புகள் வருகிறது. என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !