உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குழலிக்காக காத்திருக்கும் ஆரா

குழலிக்காக காத்திருக்கும் ஆரா

பைசா படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆரா. அதன்பிறகு ஒன்வே, தேவதாஸ் பிரதர்ஸ், குழலி படங்களில் நடித்தார். இந்த படங்கள் வெளிவரவில்லை. தற்போது காதல் புதிது என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆரா எதிர்பார்ப்பதெல்லாம் குழலி படத்தின் வெளியீட்டை. காரணம் சர்வதேச பட விழாக்களில் விருதுகளை பெற்று வரும் அந்த படம் தனக்கு நல்ல திருப்பம் தரும் என்று நம்புகிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: குழலியில் நான் கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். காக்கா முட்டை படத்தில் நடித்த விக்னேஷ் ஜோடியாக நடித்திருக்கிறேன். ஒரு கிராமத்து பெண்ணின் கல்வி கனவுகளை சொல்லும் படம் அது. அந்த படம் பல விருதுகளை குவித்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சமீபத்தில்கூட இந்தோ பிரஞ்ச் பட விழாவில் சிறந்த படம், சிறந்த இசை விருதுகளை பெற்றது. இந்த படம் தமிழ்நாட்டில் வெளிவரும்போது எனக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !