கருணாகரன் - யோகிபாபு கூட்டணியில் சுந்தரா டிராவல்ஸ்-2
ADDED : 1537 days ago
கடந்த 2001ல் முரளி - வடிவேலு கூட்டணியில் வெளியான சுந்தரா டிராவல்ஸ், முழுநீள நகைச்சுவை படமாக ரசிகர்களை மகிழ்வித்தது. இந்தப்படத்தில் சுந்தரா டிராவல்ஸ் என்கிற பழைய டப்பா பஸ் ஒன்றும் படம் முழுக்க முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற்றது. சமீபத்தில் தனது போலீஸ் கணவருடன் சர்ச்சை செய்திகளில் அடிபட்ட ராதா தான் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக சில மாதங்களாகவே சொல்லப்பட்டு வந்தது. தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட இருப்பதாகவும், அதில் கருணாகரன் - யோகிபாபு இணைந்து நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கருணாகரனும் இதை உறுதிப்படுத்தி உள்ளார். முதல் பாகத்தை இயக்கிய அசோகனே இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்க உள்ளாராம்..