ஆர்யா - சாயிஷா தம்பதிக்கு பெண் குழந்தை
ADDED : 1538 days ago
ஆர்யா நடிப்பில் வெளியான 'கஜினிகாந்த்' படத்தில் ஹீரோயினாக நடித்தவர் சாயிஷா. இந்த படத்தின் மூலம் நட்பாக பழகி வந்த இருவருக்கிடையே காதல் மலர்ந்தது. அதன்பிறகு 'காப்பான்' திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகும் சாயிஷா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'டெடி' படத்திலும் ஆர்யாவுடன் இணைந்து சாயிஷா நடித்துள்ளார். ஆர்யாவின் மனைவி சாயிஷா கர்ப்பமாக இருந்தார். இதையடுத்து இந்த நட்சத்திர தம்பதியினருக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ஆர்யா உற்சாகத்தில் உள்ளார். அப்பாவான மகிழ்ச்சியில் உள்ள ஆர்யாவுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.