கார் கவிழ்ந்து விபத்து : யாஷிகா ஆனந்த் படுகாயம்
ADDED : 1540 days ago
மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்தார். அவரின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இன்னும் பிரபலமானார். தமிழில் தற்போது சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் நிறைய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் மாமல்லபுரம் அருகே நேற்று நள்ளிரவு இவர் சென்ற கார் சாலையின் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகா படுகாயம் அடைந்தார். தற்போது தனியார் மருத்துவமனையில் யாஷிகா சிகிச்சை பெற்று வருகிறார். காரில் இவருடன் பயணித்த அவரது தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
யாஷிகா மீது வழக்குப் பதிவு
யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடைய அதிவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் நடிகை யாஷிகா ஆனந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.