உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாளவிகா மோகனனின் கவர்ச்சி படம் வைரல்

மாளவிகா மோகனனின் கவர்ச்சி படம் வைரல்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் மாறன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் பல நடிகர்களுடன் இணைந்து நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது இடுப்பில் கொலுசுடன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !