மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1494 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1494 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் தொடர், டி.ஆர்.பி ரேட்டிங்கில் நல்ல புள்ளிகளை பெற்று ஹிட் அடித்துள்ளது. தீபக் மற்றும் நக்ஷத்திரா நடிப்பில் தமிழம் சரஸ்வதியும் என்ற நெடுந்தொடர் கடந்த ஜுலை 12 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றுள்ளது.
தற்போது, இந்த தொடருக்கு கிடைத்த டி.ஆர்.பி ரேட்டிங் தான் தொலைக்காட்சி வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது. தமிழும் சரஸ்வதியும் தொடரின் முதல் எபிசோட் இதுவரை இல்லாத அளவில் அதிக பார்வையாளர்களை பெற்று டி.ஆர்.பியல் அதிக புள்ளிகளை பெற்றுள்ளது.
ஒரு தொடரின் முதல் எபிசோடுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தான், அந்த தொடரின் வெற்றி தோல்வி தீர்மாணிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழும் சரஸ்வதியும் தனக்கான பார்வையாளர்களை முதல் எபிசோடிலேயே கவர்ந்து இழுத்து கொண்டது.
முதல் வாரத்திலேயே டிஆர்பி ஹிட் அடித்திருக்கும் தமிழும் சரஸ்வதியும் தொடருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
1494 days ago
1494 days ago