மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1494 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1494 days ago
குக் வித் கோமாளி சீசன் 2 பிரபலங்கள் விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் சூப்பர் ஹிட் அடித்த நிகழ்ச்சி என்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். முதல் இரண்டு சீசன்களில் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது சீசனையும் தொலைக்காட்சி நிறுவனம் தயாரிக்க உள்ளது. சீசன் 2 வில் பங்கேற்ற அஸ்வின், சிவாங்கி, தர்ஷா குப்தா, புகழ் ஆகியோருக்கு சினிமா வாய்ப்புகளும் இதனால் கிடைத்துள்ளது.
இந்நிலையில், குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்து கொண்ட பிரபலங்கள் அனைவரும் விஜய் டிவியின் புதிய ஷோ ஒன்றுக்காக ஒன்றாக கூடியிருக்கும் போட்டோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு விஜய் டிவி பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை நடத்தியது,. அதேபோல குக் வித் கோமாளியின் வெற்றியை கொண்டாட, குக் வித் கோமாளி கொண்டாட்டம் என்ற ஷோவையும் நடத்துகிறது. அதில் கலந்து கொள்ள தான் சீசன் 2 வில் கலந்து கொண்ட பிரபலங்கள் ஒன்றாக சேர்ந்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சி அடுத்த வார ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ளது.
1494 days ago
1494 days ago