உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சேலையில் கவர்ச்சி காட்டிய மிருனாளினி : லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்

சேலையில் கவர்ச்சி காட்டிய மிருனாளினி : லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்

டிக்டாக் மூலம் பிரபலமான நடிகை மிருனாளினி, சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வந்த மிருனாளினி ரவி, டிக்டாக் செயலி மூலம் பிரபலமானார். இதனையடுத்து இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வந்தன. முதலில் நடிக்க மறுத்த மிருனாளினி தமிழ் திரையுலகிற்கு சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மிருனாளினி சிவப்பு நிற சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. மிருனாளினி தற்போது சசிகுமாருக்கு ஜோடியாக எம்.ஜி.ஆர் மகன் படத்திலும், ஆர்யா, விஷால் இணைந்து நடிக்கும் எனிமி மற்றும் விக்ரமின் கோப்ரா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !