மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1520 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1520 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1520 days ago
மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு சுராஜ் வெஞ்சாரமூடு, சோபின் சோஹிர் நடிப்பில் வெளியான 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25' திரைப்படம் சூப்பர்ஹிட் வெற்றி பெற்றது. தற்போது அந்தப் படம் தமிழில் ரீமேக்காகி வருகிறது. 'கூகுள் குட்டப்பன்' என்ற பெயரில் உருவாகி வரும் இப்படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து, முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கி வருகின்றனர்.
இப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் தர்ஷன் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் யோகிபாபு, மனோபோலா, மாரியப்பன், ப்ராங் ஸ்டார் ராகுல் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது கூகுள் குட்டப்பன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் கேஎஸ் ரவிக்குமார், தர்ஷன், யோகிபாபு, லாஸ்லியா ஆகியோருடன் ரோபோவும் இடம் பெற்றுள்ளது.
கே.எஸ்.ரவிக்குமாரின் வித்தியாசமான இயல்பான தோற்றத்துக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. அவர் இயக்கத்தில் வெளியான நட்புக்காக படத்தின் சரத்குமார் தோற்றத்தை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
1520 days ago
1520 days ago
1520 days ago