உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கணவருக்கு நிகரான சம்பளம் கேட்டதால் பட வாய்ப்பை இழந்த தீபிகா படுகோனே

கணவருக்கு நிகரான சம்பளம் கேட்டதால் பட வாய்ப்பை இழந்த தீபிகா படுகோனே

கதாநாயகனுக்கு நிகராக தங்களுக்கும் சம்பளம் வேண்டும் என்று பாலிவுட்டில் தொடர்ந்து தீபிகா படுகோனே குரல் கொடுத்து வருகிறார். ஆண்- பெண் கலைஞர்கள் இடையேயான சம்பள வித்தியாசம் குறித்தும் அவர் பலமுறை வெளிப்படையாக கருத்து கூறியுள்ளார். தீபிகா பாலிவுட்டின் சில நடிகர்களை விடவும் அதிக ஊதியத்தை அவர் பெற்று வருகிறார்.

இந்நிலையில், பத்மாவதி, பாஜிராவ் மஸ்தானி, ராம்லீலா போன்ற திரைப்படங்களை இயக்கியவரான சஞ்சய் லீலா பன்சாலி, பைஜு பாவ்ரா என்னும் பெயரில் புதிய திரைப்படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இது கடந்த 1952ம் ஆண்டு வெளியான பைஜு பாவ்ரா படத்தின் ரீமேக் ஆகும். இதில் கதாநாயகனாக பலரது பெயர் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தனது ஆஸ்தான கதாநாயகனான ரன்வீர் சிங்கை நடிக்க வைக்க சஞ்சய் லீலா விரும்புவதாக கூறப்படுகிறது.

அதேவேளையில், ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக அவரது மனைவி தீபிகா படுகோனேவை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டது. எனினும், தனது கணவருக்கு சமமான ஊதியம் வேண்டும் என தீபிகா நிபந்தனை விதித்ததால் தீபிகாவை நடிக்க வைக்கும் எண்ணம் கைவிடப்பட்டுள்ளது. சஞ்சய் லீலா இயக்கிய பத்மாவதி, பாஜிராவ் மஸ்தானி, ராம்லீலா ஆகிய மூன்று படங்களிலுமே ரன்வீர்-தீபிகா ஜோடி இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இருவரின் நடிப்பிற்காகவே ரசிகர்களின் மனதில் இந்த திரைப்படங்கள் இடம்பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !