மேலும் செய்திகள்
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
1489 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
1489 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
1489 days ago
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தில் நடித்து வருகிறார். நேற்று மகேஷ் பாபு பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் 'பர்த்டே பிளாஸ்டர்' என ஒரு டீசரை வெளியிட்டனர். அதில் மகேஷ் பாபுவையும், கீர்த்தி சுரேஷையும் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். இருவரது ஜோடிப் பொருத்தமும் மிக அழகாக இருக்கிறது என்றும், மகேஷ் பாபு கல்லூரி மாணவர் போல இருப்பதாகவும், கீர்த்தி குடும்பப் பாங்காக மிக அழகாக இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்தனர்.
நேற்றைய நாள் பிறந்த போதே அந்த டீசரை பதிவிட்டு மகேஷ் பாபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார் கீர்த்தி. அவருக்கு நேற்று மாலை 'நன்றி கலாவதி' என பதிலளித்திருந்தார் மகேஷ் பாபு. படத்தில் கீர்த்தியின் கதாபாத்திரப் பெயர் கலாவதி என்பதை மகேஷ் பாபு குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இரவு மகேஷ் பாபுவுடன் இருக்கும் 'சர்க்காரு வாரி பாட்டா' புகைப்படத்தைப் பகிர்ந்து மகேஷ் பாபு மனைவிக்கு, “நர்மதா மேம், சார் படுக்கச் செல்வதற்கு முன்பு தினமும் அவருக்கு திருஷ்டி சுற்றிப் போட மறந்துவிடாதீர்கள்,” என கோரிக்கை வைத்திருந்தார். கீர்த்தியின் இந்தப் பதிவை மகேஷ் பாபு ரசிகர்கள் லைக் செய்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
1489 days ago
1489 days ago
1489 days ago