போலீஸ் கெட்டப்பில் பிக்பாஸ் சம்யுக்தா
ADDED : 1518 days ago
பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு தமிழக மக்களிடையே பிரபலமானவர் சம்யுக்தா. மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட், யோகா கலைஞர் என பல துறைகளில் வெற்றி பெண்ணாக வலம் வந்த சம்யுக்தா, நடிகையாக ஆகும் ஆசையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியும் அவருக்கு பெயர், புகழோடு திரைப்பட வாய்ப்பையும் பெற்று தந்தது. சம்யுக்தா தற்போது தமிழ் திரைப்படம் ஒன்றில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காக அவர் போலீஸ் உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் அவரது ரசிகர்கள் தங்களை அரெஸ்ட் செய்ய சொல்லி அடம்பிடித்து வருகின்றனர்.