புல்லட் ஓட்டி மாஸ் காட்டிய ரச்சிதா
ADDED : 1518 days ago
தொலைக்காட்சி பிரபலங்களில் மிகவும் பிரபலமானவர் ரச்சிதா. சீரியல் நடிகையாக பல ஹிட் சீரியல்களில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் செந்திலுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் முன்னணி சினிமா நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ரச்சிதா, விரைவில் கன்னட படம் ஒன்றில் கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், ரச்சிதா தனது இண்ஸ்டாகிராமில் புல்லட் ஓட்டும் வீடியோவையும், சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். ஒரு ரைடர் போல உடையனிந்திருக்கும் ரச்சிதா ராயல் எனிஃபீல்ட் மீடியர் வகை வண்டியை நேர்த்தியாக ஓட்டிச் செல்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.