திடீரென நிறுத்தப்பட்ட டிவி சீரியல், ஹீரோயினுக்கு என்ன ஆச்சு?
'கோகுலத்தில் சீதை' சீரியலில் கதாநாயகி ஆஷா கவுடா ஷூட்டிங்கில் பங்கேற்காததால் படப்பிடிப்பு நடைபெறவில்லை. இதனையடுத்து அந்த சீரியல் ஒருவாரத்திற்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும்'கோகுலத்தில் சீதை' என்கிற சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நாயகனாக நந்தா மாஸ்டரும், நாயகியாக ஆஷா கவுடாவும் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தொடங்கிய இந்த தொடரில் கூடுதல் வலுசேர்க்கும் வகையில் குஷ்புவும் இணைந்து நடிக்க தொடங்கினார்.
இந்நிலையில், இந்த சீரியல் ஒரு வார காலத்திற்கு நிறுத்தபடுவதாக செய்தி வெளியாகியுள்ளது. நாயகியாக நடிக்கும் ஆஷா கவுடாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் படபிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. எபிசோடுகளுக்கான ஷூட்டிங்கும் முடிவு பெறாத காரணத்தால் ஒரு வார காலத்திற்கு இந்த சீரியல் நிறுத்தப்படுவதாக ஜீ தமிழ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் நடிகை ஆஷா கவுடாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியானது. ஆனால், அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என டிவி தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டது.