எம்ஜிஆர் அரசு திரைப்பட கல்லூரி பெயர் மாற்றம்
ADDED : 1520 days ago
திரைப்படம் சார்ந்த படிப்புகளுக்கு தமிழக அரசால் சென்னையில் நடத்தப்படும் கல்லூரி எம்ஜிஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம். இந்த கல்லூரியில் சினிமா தொடர்பான பல துறை சார்ந்த படிப்புகள் உள்ளன. இந்நிலையில் தற்போது இதன் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில், ‛‛எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தை தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் என பெயர் மாற்றம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அனைத்து ஆவணங்களிலும் இந்நிறுவனத்தின் பெயரினை புதிய மாற்றத்தின்படி குறிப்பிட அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கவிப்பட்டுள்ளது.