உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆனைமலை மாசாணியம்மனை தரிசித்த சிவகார்த்திகேயன்

ஆனைமலை மாசாணியம்மனை தரிசித்த சிவகார்த்திகேயன்

புதியவரான சிபி சக்கரவர்த்தி என்பவரது இயக்கத்தில் தற்போது டான் என்கிற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி ஆனைமலை பகுதிகளில் நடைபெற்று வந்தது. ஆனால் அதிக கூட்டம் கூடியதன் காரணமாகவும், அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியதன் காரணமாகவும் அபராதம் விதிக்கப்பட்டு நேற்று படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கிடைத்த இடைவெளியில் ஆனைமலையில் உள்ள புகழ்பெற்ற மாசாணியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !