விஜய் படத்தில் சிவகார்த்திகேயன்
ADDED : 1517 days ago
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். படத்தில் இவர் ஒரு பாடல் எழுதுவதோடு, அதை பாடவும் உள்ளார். அனிருத் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் பல ஹிட் பாடல்கள் வந்துள்ளன. அந்த வரிசையில் இந்த பாடலும் இடம் பெறும் என தெரிகிறது. முன்னதாக சிகார்த்திகேயன் பணியை தனுஷ் செய்வதாக தகல் வெளியானது. ஆனால் படப்பிடிப்புகளில் தனுஷ் பிஸியாக உள்ளதால் சிவகார்த்திகேயன் தற்போது இணைந்துள்ளார்.