உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பொறுமையா சொல்றோம் கேட்டுகோங்க நிறுத்திகோங்க : எச்சரித்த நகுலின் மனைவி

'பொறுமையா சொல்றோம் கேட்டுகோங்க நிறுத்திகோங்க : எச்சரித்த நகுலின் மனைவி

இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் எடுத்ததற்கெல்லாம் பேன் பேஜ், ஆர்மி பேஜ் ஓபன் செய்யும் கலச்சாரம் தற்போது அதிகமாக காணப்படுகிறது. அந்த வகையில் பிறந்த குழந்தைக்கு பேன் பேஜ் ஆரம்பித்து நன்றாக வாங்கி கட்டி கொண்டுள்ளனர் நெட்டிசன்கள்.

நடிகர் நகுல் - ஸ்ருதி தம்பதியினருக்கு சில மாதங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதற்கு அகீரா என பெயர் வைத்துள்ளனர். தம்பதிகள் இருவரும் தனது மகளின் புகைப்படத்தை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்வதுடன், குழந்தை வளர்ப்பது குறித்து நேர்காணல்களிலும், சமூக ஊடக நேரலையிலும் அடிக்கடி பேசி வருகின்றனர். மேலும் குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அகீராவின் அழகிய புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் வழக்கம் போல் அந்த பிஞ்சு குழந்தைக்கும் பேன் பேஜ் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து ஏற்கனவே லைவ் ஒன்றில் கடுமையாக பேசி அகீராவுக்காக ஆரம்பிக்கப்பட்ட பக்கத்தை நீக்குமாறு நகுல் கேட்டுக்கொண்டார். ஆனால், நெட்டிசன்கள் நீக்கவில்லை. இதனையடுத்து தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பக்கத்தில் நகுலின் மனைவி தன் மகள் அகீரா பேன் பேஜ் குறித்து தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும் அந்த ஸ்டோரியில் அகீரா பேன் பேஜின் ஸ்கீரின் ஷாட்டை பதிவிட்டு, அதில் பேக் என்ற வார்த்தையை ஹைலட் செய்திருக்கிறார். கூடவே, 'எங்களுக்கு உங்கள் அன்பு புரிகிறது. ஆனால், தயவுசெய்து பொறுமையாக சொல்கிறோம் கேட்டு கொள்ளுங்கள், நிறுத்தி கொள்ளுங்கள். மைனராக இருக்கும் குழந்தைக்கு பேன் பேஜ் உருவாக்குவது தவறு. உங்களுடைய சொந்த குழந்தையாக இல்லாத போது அடுத்தவர்கள் குழந்தைக்காக ஏன் இப்படி செய்கிறீர்கள்?.' என காட்டமாக கூறியுள்ளார். மேலும், இது போன்று இருக்கும் மற்ற பக்கங்களையும் தெரிவிக்கும்படி அதில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !