மேலும் செய்திகள்
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1483 days ago
பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு
1483 days ago
தமிழ் சினிமாவில் படப்பிடிப்புக்கு தாமதம் என்ற செய்திகளால் பல சர்ச்சைகளை சந்தித்தவர் சிம்பு. ஆனால் சமீபகலாமாக அவரது நடவடிக்கைகளில் பல மாற்றங்கள் தெரிகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் எடையை குறைத்தவர் ஒரு மாதத்தில் ஈஸ்வரன் படப்பிடிப்பை முடித்தார்.
சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகை ராதிகா சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார். பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பு பெற்றது. சிம்பு போஸ்டரில் மிரட்டலான பார்வையுடன் எரியும் காட்டில் சிறு வயது தோற்றத்தில் மிரட்டியிருந்தார். ஏற்கனவே உடல் எடை குறைந்து பிட் ஆக மாறியிருந்த சிம்பு இந்தப் படத்திற்காக மேலும் தீவிர உடற்பயிற்சி செய்து 15 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளர்.
தற்போது சிம்பு எடுத்துள்ள செல்பி புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மிகவும் பிட் ஆன தோற்றத்தில் மெலிந்து போய் சின்னப் பையன் போல இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூர் பகுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
1483 days ago
1483 days ago