மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1483 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1483 days ago
வெளிநாடுகளில் அதிகம் பிரபலமான சர்வைவர் என்ற நிகழ்ச்சியில், போட்டியாளர்களை தனித்தீவு ஒன்றில் தனியாக விட்டுவிடுவார்கள். அந்த தீவில் 100 நாட்கள் தாக்குபிடிப்பவர்களே வெற்றியாளர்களாக கருதப்படுவார்கள். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் சர்வைவர் நிகழ்ச்சியை தமிழில் தயாரித்து வருகிறது. தமிழில் இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கவுள்ளார். இதன் புரோமோ சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் முதல் சீசனாக வெளிவரும் சர்வைவர் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் பட்டியலில் சென்னை 28 புகழ் விஜயலெட்சுமியும் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், தொலைக்காட்சி சார்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள விஜயலெட்சுமி, காலையிலிருந்து ஒரே பீலிங்ஸ் அடேய் பாய்ஸ் ஐ லவ் யூ 3000 #willmissUbig #howtodothis என குறிப்பிட்டுள்ளார்.
'சர்வைவர்' நிகழ்ச்சிக்காக தனித்தீவை வாடகைக்கு எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், விஜயலெட்சுமி ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பும் வீடியோ ஒன்றும் தற்போது இணையத்தில் வைரலாகிறது. இதன் மூலம் அவர் 'சர்வைவர்' நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்ற செய்தி வேகமாக பரவி வருகிறது.
இவர் தவிர 'சர்வைவர்' நிகழ்ச்சியில் ஜான் விஜய், நந்தா, வனிதா, வித்யூலேகா, ஷாலு ஷம்மு, ஸ்ரீ ரெட்டி, இந்திரஜா சங்கர் (ரோபோ சங்கரின் மகள்), VJ பார்வதி ஆகியோரும் கலந்து கொள்ளவிருப்பதாக இணைய தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
1483 days ago
1483 days ago