மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1484 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1484 days ago
பூவே உனக்காக சீரியல் டி ஆர் பியில் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கு பக்க பலமாக சினிமா நடிகை ஒருவரை சீரியலுக்குள் நுழைத்துள்ளனர்.
வே உனக்காக தொடரில் சமீபத்தில் நாயகன் கதாபாத்திரத்தில் அசீம் இணைந்தார். அதன்பிறகு இந்த தொடர் டி ஆர் பி பட்டியலில் முன்னேற்றத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இத்தொடரில் புதிதாக சினிமா நடிகை ஒருவர் இணையப் போவதாக டிவி நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த நடிகை யார் என்ற ரகசியம் உடைந்துள்ளது.
தனுஷூடன் திருடா திருடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமான சாயா சிங் மீண்டும் சின்னத்திரையில் பூவே உனக்காக சீரியலில் முக்கியமான ரோலில் நடித்து ரீ என்ட்ரி கொடுக்கிறார். முன்னதாக அவர் நாகம்மா, ரன் ஆகிய தொடர்களின் மூலம் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். அந்த தொடர்கள் போதிய வரவேற்பில்லாமல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சாயா சிங்கின் இந்த ரீ என்ட்ரி அவரது கேரியருக்கும், தொடருக்கும் பக்க பலமாக இருந்து கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
1484 days ago
1484 days ago