மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1484 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1484 days ago
சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஜோடியாக வலம் வரும் மதன் - ரேஷ்மா, ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து தங்களது காதலை பரிமாறிக் கொண்டனர்.
ஜீ தமிழின் 'பூவே பூச்சுடவா' தொடரில் நடித்து மதன், ரேஷ்மா இருவரும் இந்த வருட புத்தாண்டு அன்று தங்களது காதல் குறித்து வெளிப்படையாக அறிவித்தனர். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தங்கள் ரொமான்ஸ் வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு காதல் பறவைகளாக சமூக வலைத்தளங்களில் சிறகடித்து வருகின்றனர்.
தற்போது கலர் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'அபி டெய்லர்ஸ்' தொடரிலும் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்நிலையில், அபி டெய்லர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் அளித்த ஒரு பேட்டியின் போது அந்த சேனலின் சார்பில் அவருக்காக ஒரு சர்ப்ரைஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. பேட்டி முடியும் வேளையில் அங்கு வரும் மதன் தனது காதலி ரேஷ்மாவுக்கு பூங்கொத்து ஒன்றை கொடுத்து 'ஹே அபி ஐ லவ் யூ... ஆல் தி பெஸ்ட்...' என சொல்லிறார். அதை ரேஷ்மா வெட்கத்துடன் ஏற்றுக் கொள்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
1484 days ago
1484 days ago