மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1484 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1484 days ago
75-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சில மாதங்களுக்கு முன் வெளியான தனுஷின் 'கர்ணன்' திரைப்படம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட நாடே தயாராகி வரும் நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சி தமது ரசிகர்களுக்காக அதிரடியான திரைப்படங்களை ஒளிபரப்பவுள்ளது. அந்தவகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டையும், ஜாதி ரீதியாக சில விமர்சனங்களையும் பெற்ற கர்ணன் படம் மாலை 6மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ளது.
இதுதவிர காலை 8 மணிக்கு அல்லு அர்ஜுன், அனு இம்மானுவேல் நடித்த 'என் பேரு சூர்யா என் வீடு இந்தியா' திரைப்படமும் ஒளிபரப்பாகிறது. தொடர்ந்து காலை 10:30 மணிக்கு சுவாரஸ்யமான திகில் திரைப்படமான 'மிருகா' படமும், பிற்பகல் 1 மணிக்கு விவாத நிகழ்ச்சியான, “தமிழா தமிழா - ஸ்டார்ஸ் ஸ்பெஷல்” இரண்டு மணிநேர சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இதில், பிரபல நட்சத்திரங்களும், அவர்களது குடும்பத்தினர்களும் இரு எதிரெதிர் அணிகளாக பங்கேற்கவுள்ளனர்.
பிற்பகல் 3 மணிக்கு 1250 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் 'யாரடி நீ மோகினி' சீரியலின் - வெற்றி விழா' கொண்டாட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் அந்த தொடரில் நடித்த நடிகர்-நடிகைகள் மற்றும் மொத்த குழுவினரும் கௌரவிக்கப்படுவது மட்டுமல்லாமல்; ஏப்ரல் 2017-ம் ஆண்டு இத்தொடர் துவங்கப்பட்ட போது நிகழ்ந்த பல்வேறு இனிமையான தருணங்கள், அனுபவங்கள் மற்றும் ஆச்சரியங்களும் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படவுள்ளது.
இதுதவிர ஜீ தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் புத்தம் புதிய பிரைம் டைம் நிகழ்ச்சியான ‛நினைத்தாலே இனிக்கும்' நிகழ்ச்சியின் பிரம்மாண்ட துவக்க விழாவும் அன்றைய தினத்தில் ஒளிபரப்பாகவுள்ளது. இதை ஆர்.ஜே. விஜய் மற்றும் கிகி ஆகியோர் தொடரின் கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்து வைத்து, நேயர்களிடம் அந்நிகழ்ச்சியைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர உள்ளனர்.
1484 days ago
1484 days ago