உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நீச்சல் உடை படங்களை வெளியிட்ட ஹன்சிகா

நீச்சல் உடை படங்களை வெளியிட்ட ஹன்சிகா

ஹிந்தி டிவி நிகழ்ச்சிகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த “தேசமுருடு” என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யோடு வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, பிரியாணி, அரண்மனை, ஆம்பள, ரோமியோ ஜூலியட், போகன் என பல படங்களில் நடித்தார். அடுத்து ஹன்சிகா நடிப்பில் அவரது 50வது படமான மஹா விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது ஹன்சிகா தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். நீருக்கு நடுவே நீச்சல் உடையில் விடுமுறையைக் கழித்து வரும் ஹன்சிகாவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !