12 பேர் இரட்டை வேடம்
ADDED : 1868 days ago
பிரபு ஜெயராம் இயக்கும் படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. படத்திற்கு என்ன சார் உங்க சட்டம் என தலைப்பு வைத்துள்ளனர். படம் குறித்து இயக்குனர் அளித்த பேட்டி: அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை மையக்கருவாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ‛ஒரு வீடு இரு வாசல் பட பாணியில் இரண்டு கதைகள் இருக்கும். ‛பீச்சாங்கை கார்த்திக் நாயகனாக நடிக்க, சவுந்தர்யா, அயிரா நாயகியராக நடித்துள்ளனர். இதில், ரோகிணி, ‛ஜூனியர் பாலைய்யா உள்ளிட்ட, 12 பேர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர்.