கயல் ஆனந்தி பட டிரைலரை வெளியிட்ட மகேஷ்பாபு
ADDED : 1505 days ago
தமிழில் கயல், விசாரணை, பரியேறும் பெருமாள். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, கமலி பிரம் நடுக்காவேரி போன்ற படங்களில் நடித்து பிரபலமான ஆனந்தி, தெலுங்கிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது 'ஸ்ரீதேவி சோடா சென்டர்' என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். கருணா குமார் இயக்கும் இப்படத்தில் நடிகை ஆனந்தி, கிராமத்தில் சோடா கம்பெனி நடத்தும் பெண்ணாக நடித்துள்ளார். காதலும், காமெடியும் கலந்த படமாக தயாராகும் இதில் சுதீர்பாபு ஹீரோவாக நடிக்கிறார். இந்நிலையில், 'ஸ்ரீதேவி சோடா சென்டர்' படத்துக்கு பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு உதவியுள்ளார். அதன்படி நேற்று இப்படத்தின் டிரெய்லரை மகேஷ் பாபு வெளியிட்டார்.