உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளமை படங்களை பகிர்ந்த ‛ராஜா ராணி 2' பிரவீனா

இளமை படங்களை பகிர்ந்த ‛ராஜா ராணி 2' பிரவீனா

சின்னத்திரை நடிகையான பிரவீனா தனது இளம் வயது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கியுள்ள நெட்டிசன்கள் அவரை ஹீரோயின் என வர்ணித்து வருகின்றனர்.

தொலைக்காட்சி தொடர்களில் அம்மா மற்றும் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பிரவீனா. தற்போது ராஜா ராணி 2 சீரியலில் கண்டிப்பான மாமியாராக நடித்து வருகிறார். கேரளாவை சேர்ந்த நடிகையான இவர் சினிமாக்களிலும் நடித்துள்ளார். பிரவீனா சமீபத்தில் மலையாள சினிமா பிரபலங்களுடன் எடுத்து கொண்ட தனது இளம் வயது புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் கமெண்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வந்தது. இந்நிலையில் அவரது இளமைகாலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தற்போது வைரலாய் பரவி வருகிறது. அதை பார்க்கும் நெட்டிசன்கள் ஹீரோயின் மாதிரி இருக்காங்களே என ஹார்ட்டினை தெறிக்கவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !