ஓணம் ஸ்பெஷல் போட்டோவை வெளியிட்ட தர்ஷா; வாயடைத்து போன ரசிகர்கள்
ADDED : 1506 days ago
டிக்டாக் பிரபலமான தர்ஷா குப்தா தனக்கு கிடைத்த வாய்ப்பை சின்னத்திரையில் சரியாக பயன்படுத்தி கொண்டார். விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவரது ரசிகர்களின் எண்ணிக்கை மேலும் உயர காரணமாக இருந்தது.
இதனையடுத்து திரைப்பட வாய்ப்புகள் கதவை தட்டவே, வெள்ளித்திரையில் பிஸியாகி விட்டார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களால் ரசிகர்களை கட்டிப்போடும் தர்ஷா, ஓணம் ஸ்பெஷலாக சில புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவரின் அந்த அழகிய புகைப்படங்களை பார்க்கும் நெட்டீசன்கள் வாய் பேச முடியாமல் மெய் மறந்து ரசித்து வருகின்றனர்.