பாட்டு பாடி அத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன்; குவியும் பாராட்டுகள்!
ADDED : 1620 days ago
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் குமரன் தங்கராஜன். சீரியலை தாண்டி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று கலக்கி வரும் குமரன், மானாட மயிலாட உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனது திறமையை நிரூபித்தார். இந்நிலையில், அவர் தனது பாடும் திறமையை வெளிப்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில், வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் ரசிகர்கள், குமரனுக்கு பாடும் திறமை இருக்கிறதா? அடடே என்ன ஒரு குரல்? சகலகலா வல்லவர் தான் என புகழ்ந்து வருகிறார்கள்.