பார்த்திபன், கவுதம் கார்த்திக் இணையும் யுத்த சத்தம்
ADDED : 1506 days ago
நடிகர் பார்த்திபன், எப்போதும் வித்தியாசமான கதைகளிலேயே நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், ஒத்த செருப்பு படத்திற்கு பிறகு கவுதம் கார்த்திக் உடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். எழில் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்திற்கு யுத்த சத்தம் என தலைப்பு வைத்துள்ளனர். பார்த்திபன், கவுதம் கார்த்திக் உடன் புதுமுகம் சாய்பிரியா தேவா நாயகியாக நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் போஸ்டரை நடிகர் விஜயசேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.