ஏப்.,14-ல் வெளியாகவுள்ள கே.ஜி.எப்-2
ADDED : 1504 days ago
கே.ஜி.எப் படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது. தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டாக இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து பல்வேறு மாவட்டங்களில் தியேட்டர் திறப்பு உள்ளிட்ட தளர்வுகளை அறிவித்துள்ளதால், தற்போது கே.ஜி.எப்-2 படம் அடுத்தாண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.