உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹீரோயின் ஆனார் அனன்யா மணி

ஹீரோயின் ஆனார் அனன்யா மணி

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான வந்தாள் ஸ்ரீதேவி தொடரில் நடித்தவர் அனன்யா மணி. ஊட்டி அருகே உள்ள மசினகுடியை சேர்ந்தவர், கோவையில் பட்டப்படிப்பு முடித்தவர். ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் சிறிய கேரக்டர்களிலும் நடித்துள்ளார்.

தற்போது அனன்யா மணி ஹீரோயின் ஆகியிருக்கிறார். நட்டி நடிக்கும் வெப் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இதில் இன்னொரு ஹீரோயினாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார். இந்த படத்தை ஹாருன் இயக்குகிறார். வேலன் புரொடக்ஷன் சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரிக்கிறார். கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !