பீஸ்ட் படத்தில் செல்வராகவன் சம்பளம்
ADDED : 1877 days ago
சாணிக்காயிதம் படத்தில் கீர்த்தி சுரேசுடன் இணைந்து நாயகனாக நடித்துள்ளார் செல்வராகவன். இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. முதல் படம் வெளியாவதற்கு முன்பே தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் செல்வராகவன். இந்தநிலையில் அடுத்தடுத்து செல்வராகவனை தங்கள் படங்களில் நடிக்க வைக்க சில இயக்குனர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, பீஸ்ட் படத்தில் நடிக்க செல்வராகவனுக்கு ரூ. 2 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக சோசியல் மீடியாவில் செய்தி வெளியாகி உள்ளது.