உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 11ஆம் ஆண்டு திருமண நாள் - பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி பதிவு

11ஆம் ஆண்டு திருமண நாள் - பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி பதிவு

1994ல் நடிகை லலிதா குமாரியை திருமணம் செய்தார் நடிகர் பிரகாஷ்ராஜ். அவர்களுக்கு மேக்னா, பூஜா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால் 2009ல் மனக்கசப்பு காரணமாக பிரகாஷ்ராஜ் - லலிதாகுமாரி ஆகிய இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

அதையடுத்து 2010ல் போனிவர்மா என்ற நடன இயக்குனரை திருமணம் செய்து கொண்டார் பிரகாஷ்ராஜ். அவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஆகஸ்டு 24ந்தேதியான இன்று தங்களது 11ஆவது திருமண நாள் என்பதால் டுவிட்டரில் ஒரு நெகிழ்ச்சியான பதிவு வெளியிட்டுள்ளார் பிரகாஷ்ராஜ்.

அதில், என்னுடன் 11 ஆண்டுகளாக பயணம் செய்து வரும் எனது அன்பு மனைவிக்கு நன்றி. ஒரு அற்புதமான மனைவியாகவும், சிறந்த தோழியாகவும் என்னுடன் பயணித்து வருகிறார் என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது அண்ணாத்த, எனிமி படங்களைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் உள்பட சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் பிரகாஷ்ராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !