சஞ்சனா, ராகினி போதை பொருள் பயன்படுத்தியது உறுதியானது
ADDED : 1562 days ago
கன்னட சினிமாவின் பிரபல நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி. இவர்கள் போதை பொருள் பயன்படுத்தியாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ராகினி, சஞ்சனா இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகி உள்ளது. நடிகைகளின் தலைமுடி மாதிரியை ஆய்வு செய்ததில் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து இருவர் மீதும் அடுத்தக்கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படலாம் என தெரிகிறது.