நாகசைதன்யா படத்திற்கு இருபக்கமும் இடி
ADDED : 1519 days ago
தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரும் நடிகை சமந்தாவின் கணவருமான நாகசைதன்யா நடிப்பில் லவ் ஸ்டோரி என்கிற படம் வரும் விநாயகர் சதுரத்தி பண்டிகையை முன்னிட்டு செப்-10ஆம் தேதி தியேட்டர்களில் நேரடியாக ரிலீசாக இருக்கிறது. இந்தநிலையில் நானி நடித்த டக் ஜெகதீஷ் படத்தை அதற்கு முதல்நாளான செப்-9 அன்று ஒடிடியில் ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருக்கிறதாம் அமேசான் பிராமி நிறுவனம்.
அப்படி டக் ஜெகதீஷ் படம் வெளியானால் நிச்சயம் தியேட்டர்களுக்கு செல்லும் ரசிகர்களை வீட்டிலேயே இழுத்து பிடித்து அமரவைத்து விடும். இதனால் நாகசைதன்யா படத்திற்கு மிகப்பெரிய வசூல் இழப்பு ஏற்படும் என அஞ்சுகின்றனர் லவ் ஸ்டோரி பட தயாரிப்பு நிறுவனம். இது போதாதென்று நடிகர் நிதின் நடித்துள்ள மேஸ்ட்ரோ படத்தையும் ஹாட்ஸ்டார் நிறுவனம் செப்-9 அன்றே ஓடிடியில் வெளியிட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.