விவேக் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரிக்கிறது
ADDED : 1661 days ago
நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17 ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டே நாளில் அவர் மரணம் அடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தடுப்பூசி போட்டதால்தான் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார் என்று தகவல்கள் பரவியது. ஆனால் இதனை அரசு மருத்துவர்களும், அதிகாரிகளும் மறுத்தனர்.
கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியதால்தான் நடிகர் விவேக் மரணமடைந்துள்ளார். அவரது இறப்பில் மர்மம் இருக்கிறது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனுவை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க முடிவு செய்துள்ளது. இதனை ஆணையம் முறைப்படி அறிவித்துள்ளது.