மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1469 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1469 days ago
கன்னித்திவு உல்லாச உலகம் 2.0-வில் இந்தவார சிறப்பு விருந்தினராக நடிகை நமீதா கலந்து கொள்கிறார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் கன்னித்தீவு நிகழ்ச்சி காமெடி ஷோக்களின் அரசனாக உருவெடுத்து வருகிறது. அந்த அளவிற்கு புதுமையான களத்துடன், புத்தம் புதிய கேம் ஷோக்களுடன் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. இந்த வார எபிசோடில் தீவில் நுழையும் எதிராளிகளிடமிருந்து தனது மக்களை காப்பாற்ற ஜல்சா ராஜா முயற்சி செய்வது போல் நகைச்சுவையான கான்செப்டை உருவாக்கியுள்ளனர். அதில் சிறப்பு விருந்தினராக நடிகை நமீதா கலந்து கொள்கிறார். நமீதா, ஜல்சா ராஜாவுடன் போடும் ஆட்டமும், அவருடன் செய்யும் அலப்பறைகளும் புரோமோக்களாக வெளிவந்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னித்தீவு 2.0 வரும் ஞாயிறு இரவு 7 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
1469 days ago
1469 days ago