கேரளா ஸ்டைலில் அழகு கொஞ்சும் விஜே தியா மேனன்!
ADDED : 1512 days ago
தியா மேனன் மியூசிக் சேனல் ஒன்றில் தனது விஜே பயணத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து முன்னணி தொகுப்பாளினியாக சூப்பர் சேலஞ்ச், கிரேஸி கண்மணி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. அதன்பிறகு சிங்கப்பூரில் செட்டிலாகிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜே வேலையை விடாமல் தொடர்ந்து வருகிறார். இருந்தாலும் சமீப காலங்களில் முன்பு போல் இவரை முக்கியமான நிகழ்ச்சிகளில் காண முடிவதில்லை. இருப்பினும் தியா தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு தான் ஆக்டிவாக இருப்பதை காட்டி வருகிறார். சமீபத்தில் ஓணம் பண்டிகையையொட்டி கேரளா ஸ்டைலில் புடவை கட்டி எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தியா தற்போது வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின.