அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் 'குபேரா' நடிகர்!
ADDED : 1 days ago
அல்லு அர்ஜுன், அட்லி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பட்ஜெட் ரூ. 600 கோடி என்கிறார்கள். இதில் கதாநாயகிகளாக தீபிகா படுகோனே, மிருணாள் தாகூர் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டமாக ஹைதராபாத் மற்றும் மும்பையில் அரங்கம் அமைத்து நடத்தி வருகின்றனர்.
தற்போது இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் ஜிம் செராப் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் சமீபத்தில் தனுஷின் 'குபேரா' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.