'அப்புச்சி கிராமம்' இயக்குனருடன் கைகோர்த்த நிதின்!
ADDED : 3 minutes ago
கடந்த 2014ம் ஆண்டில் தமிழில் குறைந்த பொருட்செலவில் ஒரு வித்தியாசமான படமாக வெளிவந்த படம் 'அப்புச்சி கிராமம்'. வி ஆனந்த் இயக்கி இருந்தார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்றாலும் இந்த படத்திற்கு பிறகு இவர் பெரும்பாலும் தெலுங்கில் 'டைகர், டிஸ்கோ ராஜா, ஊர் பெயர் பைரவகொனா' ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நிதின் 36வது படத்தை இயக்குகிறார். இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இவர் இயக்கும் படங்களில் எப்போதும் சையின்ஸ் பிக்சன் டச் இருக்கும். அதேபோல் இப்படம் சையின்ஸ், பிக்சன் ஜானரில் உருவாகிறது என குறிப்பிட்டுள்ளனர்.